Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


சம்பிக்கவின் கைது; அரசுடன் மீண்டும் மோதும் சபாநாயகர்


2019-12-26 14865

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைதானது நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என்பதை சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது செய்யப்பட்ட முறை நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கு முன்னரும் கூறியிருக்கிறார்.

எனினும் இதனை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நிரகரித்திருந்தனர்.

அத்தோடு சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் விமர்சித்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்களை சபாநாயகர் நிராகரித்து அறிக்கை வெளியிட்டார்.

நாடாளுமன்ற சம்பிரதாயத்தை தாம் எக்காரணம் கொண்டும் மீறுவதற்கு இடமாளிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Advertiesment